மகன் என்கிற அடிப்படையிள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!

61பார்த்தது
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின் வீட்டில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சியினருடன் சேர்ந்து பார்த்த பின்னர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது, தி. மு. க. வில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்கிற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது தி. மு. க. வின் வாரிசு அரசியலையே காட்டுகிறது. தி. மு. க. வில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்து இருந்தாலும் அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை தி. மு. க பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது. மாற்றி அமைக்கப்பட்டு உள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும் என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி