நகராட்சி தலைவர் மீது டம்ளர் வீசப்பட்டதால் பரபரப்பு!

60பார்த்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் மீது டம்ளர் வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே, நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில்லை, குடிநீர் சரியாக விநியோகம் செய்வதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினர். இந்நிலையில், திமுக கவுன்சிலர் நவீன், வருவாய் துறைக்கு சொந்தமான நீர்வழி பாதையை ஆக்கிரமித்து நகராட்சி சாலை அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஒரு பெண் அதிகாரி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒரு கவுன்சிலர் திடீரென டம்ளரை எடுத்து நகராட்சி தலைவர் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் இருக்கை முன்பு திரண்டு அதிமுக கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் உள்ளே அழைக்கப்பட்டு கவுன்சிலர்களை அப்புறப்படுத்த முயன்றனர். நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வின், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி அங்கிருந்து வெளியேறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி