ஜடையம்பாளையம்: திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் திருதேரோட்டம்!

57பார்த்தது
கோவை, மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென் திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார். வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க திருத்தேர் கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வளம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி