கோவை மாவட்டம் அன்னூரில் அவிநாசி சாலையில் வசித்து வந்த ரசூல் என்ற கட்டிடத் தொழிலாளி, மேட்டுப்பாளையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அன்னூரில் இருந்து கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த பிக்கப் வாகனம் ஒன்று, ஜீவா நகர் பகுதியில் ரசூலின் வாகனத்தின் மீது மோதியது. இந்த மோதலில் ரசூல் சாலையில் தூக்கி வீசப்பட்டார். மேலும், பிக்கப் வாகனமும் சாலையின் நடுவே கவிழ்ந்தது. கடுமையாக காயமடைந்த ரசூல் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விபத்தை ஏற்படுத்திய பிக்கப் வாகன ஓட்டுநர் ஹரிகுமார் மீது அன்னூர் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.