கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் அல்தீப் நேற்று வடகிமனா பஸ் நிலையத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தனியார் பஸ் ஊழியர்கள் 3 பேர், அப்துல் அல்தீப்பின் ஆட்டோவை துரத்தி சென்று இடைமறித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அப்துல் தனது ஆட்டோவிலேயே மலப்புரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.