எலக்ட்ரோலைட்டுகள் என்பவை உடலில் உள்ள தாதுக்களை குறிக்கிறது. அவை முக்கிய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. கால்சியம், குளோரைடு, மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட்டுகள் ஆகியவை உடலில் இருக்கும் சில எலக்ட்ரோலைட்டுகள் ஆகும். உடலில் நீரிழிப்பு ஏற்படும் பொழுது எலக்ட்ரோலைட்டுகளில் சமநிலை ஏற்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல், குழப்பம், சோர்வு, தசைப்பிடிப்பு, விரைவான இதயத்துடிப்பு, பலவீனம் சில சமயங்களில் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம்.