கோவை: வள்ளி - கும்மி ஆடும் பெண்களை இழிவாக பேசுவதாக புகார்!

80பார்த்தது
கோவை, தொண்டாமுத்தூர், கொம்பனூர் பகுதியில் கடந்த 24 -ம் தேதி வள்ளி - கும்மி ஆடுவதற்காக வள்ளி கும்மி கலைஞர்கள் சென்று உள்ளனர். அப்போது தொண்டாமுத்தூர் சேர்ந்த வாழை இலை பாபு என்பவர், வள்ளி - கும்மி ஆடும் பெண்களை இழிவு படுத்தும் வகையிலும் கொச்சையாக தொலைபேசியில் பேசி மிரட்டி விடுத்து உள்ளார்.
மேலும் வள்ளி - கும்மி ஆடும் கலைஞர்களின் சாதியின் பெயரை குறிப்பிட்டு ஆபாசமாக பேசுவதாகவும், அவர் மீது தொண்டர்முத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட கலைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி வள்ளி - கும்மி கலைஞர்கள் நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண்களுடன், வள்ளி - கும்மி ஆடும் கலைஞர்கள் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து வாழை இலை பாபு-விடம் வள்ளி - கும்மி கலைஞர்கள் மீண்டும் நேரில் சென்று கேட்ட போது பல ஆண்கள் முன்னிலையில் பெண்கள் என்றும் மாறாமல் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு கொச்சையாகவும், இது ஆபாசமாகவும் பேசியதாக பெண்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தால் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாகவும், அதே போல அந்தப் பெண்ணின் கணவரையும் சாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்து உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி