கர்நாடக மாநிலத்தில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நின்றுள்ளது. அங்கு சென்ற போலீசார், லாரி ஓட்டுநரிடம் இருந்து ரூ.100 லஞ்சமாக பெற்றுள்ளனர். இதனை கவனித்த சமூக ஆர்வலர் ஒருவர், அதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டே போலீசாரை நோக்கிச் சென்றார். தொடர்ந்து, அவர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில், ஓட்டுநரிடம் இருந்து பெற்ற ரூ.100-ஐ திருப்பிக் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.