கோவை, ராம் நகர் பகுதியில் உள்ள செந்தில்குமரன் திரையரங்கில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. திரையரங்கில் இரவு காட்சிக்கு வந்த பயணி ஒருவர், தனது ரெட் டாக்ஸி ஓட்டுநரை படம் முடியும் வரை காத்திருக்க கூறினார். படம் முடிய மூன்று மணி நேரம் ஆகும் என்பதால், ஓட்டுநர் தனது டாக்ஸி இருக்கையிலேயே குடித்து விட்டு உறங்கினார். இந்நிலையில், போதை தலைக்கேறிய நிலையில் டாக்ஸி கதவைத் திறந்து வெளியே வந்த ஓட்டுநர், நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்தார். போதை மயக்கத்தில் அங்கேயே உறங்கிப் போனார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், தனது கைப்பேசியில் ஓட்டுநர் சாலையின் நடுவே உறங்கும் காட்சியைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.