மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் கேவலமா?, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களை அவமானப்படுத்தினால் 2026ல் தவெக டெபாசிட் கூட வாங்காது என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து வீடியோ வெளியிட்டு தவெக நிர்வாகி ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அரசியல் ஞானம் இல்லாதவரை உடன் வைத்துக்கொண்டால் தவெகவை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என அந்த தொண்டர் தெரிவித்துள்ளார்.