திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தால் கட்சியை விட்டு நீக்குவேன் என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடம் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இபிஎஸ், "திருச்சி உள்பட பல மாவட்டங்களில் திமுக அமைச்சர்களுடன் அதிமுக நிர்வாகிகள் நெருக்கம் காட்டி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அது போன்று செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். அவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன்" என்று கூறியுள்ளார்.