ஒருவர் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து டிஹைடிரேஷன் எனப்படும் நிலைக்கு தள்ளப்படுவர். வறண்டு போன வாய் மற்றும் தோல் இதன் முக்கிய அறிகுறி ஆகும். சிறுநீரின் நிறம் அடர் பழுப்பு அல்லது கருமை நிறத்திற்கு மாறினால் உங்களுடைய உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். தலைவலி, வாந்தி, குமட்டல், அதீத சோர்வு, தசை வலி, மயக்கம் ஆகியவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும்.