தமிழகத்தில் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தி திணிப்பை கண்டுபிடித்தால், ரூ.99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, பா.ஜ.க சார்பில் திருப்பூரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், திருப்பூர் மாநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், மோடி அரசின் மும்மொழி கொள்கையில், இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.