பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
அமலாக்கத்துறை ரைடு குறித்த கேள்விக்கு, அமலாக்கத்துறை சாராய அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தால் எப்படி திசை திருப்ப முடியும், நேற்று முன்தினம் டாஸ்மார்க் ஹெட் குவாட்டர்ஸ் இல் ரைடு நடத்தப்பட்டது, கரூரில் சாராய அமைச்சரின் நெருங்கிய வட்டாரத்தில் ரைடு நடத்தப்பட்டது, சாராய ஆளை நிறுவனங்கள் மீது ரைடு நடத்தப்பட்டது. சாராய அமைச்சர் முடிவு செய்வார் எங்கு எவ்வளவு கமிஷனில் எவ்வளவு பாட்டில்கள் வாங்க வேண்டும் என்று, இப்படியெல்லாம் செய்தால் டேக்ஸ் இல்லாமல் பாட்டில்கள் உள்ளே வரும். இதற்காகத்தான் அமலாக்கத்துறை ரெய்டு செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இவர்கள் டாஸ்மாக் மற்றும் சாராய ஆலைகளை வைத்து கொள்ளை அடிக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துத்தான் பரிசு பொருட்களே கொடுக்கிறார்கள்.
கடந்த வாரம் முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு, ஒரு வெள்ளி தட்டமும் டம்ளரும் வழங்கப்பட்டு இருக்கிறது, இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வந்தது? இதை அமலாக்கத்துறை ரைட் செய்தால், எப்படி தப்ப முடியும். இதற்கு முன்னரே ஜெகத்ரட்சகன் ரைட்கு உள்ளாக்கப்படும்போது ஆயிரம் கோடி ரூபாய் சிக்கி இருந்தது. இவர்களெல்லாம் புத்தபீடத்தில் அமர்ந்து தியானம் செய்யும் ஆட்களா என்ன? என கேள்வி எழுப்பினார்.