கவுண்டம்பாளையம் - Kavundampalayam

கோவை: சுடிதார் பேண்ட் கழுத்தில் இறுக்கி பள்ளி மாணவன் பலி

கோவை: சுடிதார் பேண்ட் கழுத்தில் இறுக்கி பள்ளி மாணவன் பலி

கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் வடிவேலு(39). புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் இரண்டாம் தளத்தில் தனது மனைவி வெண்ணிலா(35) மகன்கள் கவுதம்(13) சுதேஷ்(8) ஆகியோருடன் வசித்து வருகிறார். முதல் மகன் கவுதம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி, வடிவேலு வழக்கம் போல் ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். அன்று, பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை என்பதால் அவரின் மகன்கள் இருவரும் மதியம் வீட்டிற்கு வந்தனர். தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர், மாலை கவுதம், அவரின் தம்பி சுதேஷ் மற்றும் தாயார் மூவரும் தரைத்தளத்தில் உள்ள உறவினர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கவுதம் தான் வீட்டிற்கு சென்று டிவி பார்க்க போவதாக கூறி மேலே சென்றார். வீட்டிற்கு சென்ற கவுதம் கொடியில் காயப்போட்டிருந்த துணிகளை பிடித்து சுற்றி விளையாடினார். இதில், அவரின் தாயாரின் சுடிதார் பேண்ட் கழுத்தில் சுற்றி இறுக்கியதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து வடிவேலு பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా