கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் உலகத் தாய்மொழி நாள் விழா தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தலைமையில் நேற்று (பிப்ரவரி 21) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவில், பாட்டரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன. இதில் அயலக தமிழர்களின், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இரண்டு முறை மின்சாரம் தடைபட்டது.
இதனால் சிறிது நேரம் இருள் சூழ்ந்தாலும், விழாவில் கலந்து கொண்டவர்களின் ஆர்வத்தால் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. மின் தடை ஏற்பட்டாலும், விழாவில் கலந்து கொண்டவர்களின் ஆர்வமும், தமிழ் மொழியின் மீதான பற்றும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.