கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு, கலப்பு திருமணம் புரிந்தோர் நல சங்கம் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் காதலர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் காதல் திருமணம் புரிந்து கொண்டோர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் காதல் திருமணம், கலப்பு திருமணம் புரிய வேண்டியது குறித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.