தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நேற்று கோவை மாவட்டம் ஆலந்துறை நாதே கவுண்டன் புதூர் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதில் வெற்றி பெற்ற வீரருக்கு 50, 000 ரொக்க பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த காளைகளுக்கும் காளையர்களுக்கும், தங்க நாணயம் கோப்பைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள், வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, பேரூர் கழக செயலாளர் ரங்கசாமி, ஒன்றிய செயலாளர் சாமி பையன், தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி, மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.