உத்தரப் பிரதேச மாநிலம் காசி மாநகரின் கங்கை படித்துறையில் 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் பலியான மற்றும் பயங்கரவாதிகளின் நேரடி தாக்குதலில் பலியான தேச பக்தர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்குதல் அமைப்புகள் சார்பில் நேற்று திதி (சிரத்தாஞ்சலி) கொடுக்கப்பட்டது. அறம் நம்மை காக்கும் என்ற வாசகத்துடன், பயங்கரவாதத்தை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று அமைப்புகளும் முழக்கமிட்டன. இந்த துயர நிகழ்வில் உயிரிழந்த அனைத்து தேச பக்தர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விசுவ இந்து பரிசத் தர்ம யாத்திரா தென் தமிழக பொறுப்பாளர் இல. சிவலிங்கம், மேட்டுப்பாளையம் ஜில்லா செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் குணசேகரன், பஜ்ரங்தள் அமைப்பாளர் மணி, தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.