கோவை சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தமிழ் ஈழமும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஈழத்துக்கும் திராவிட இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில் இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசும் கொளத்தூர் மணியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்பினர் கருத்தரங்கம் நடைபெறும் அரங்கின் முன்பு நேற்று (ஜனவரி 30) திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட இந்து அமைப்பினர் நாற்பத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.