கோவை: இந்து பரிசத் மற்றும் பா. ஜ. க பிரமுகர்கள் 3 பேர் கைது!

77பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் நேற்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி இருந்ததை முன்னிட்டு அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததுடன் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனிடையே கோவையில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்டுக் கொண்டு இருந்த விசுவ இந்து பரிசத் அமைப்பின் தர்ம யாத்திரா பிரிவின் தென் தமிழக பொறுப்பாளர் சிவலிங்கம், சாய்பாபா நகர் பிரகண்ட தலைவர் கண்ணன், பா. ஜ. க ரத்தினபுரி மண்டல் முன்னாள் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோரை வீட்டில் வைத்து ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் வீட்டு காவலில் அடைத்தனர்.
இந்தியாவில் முகலாய பேரரசு ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் போது கூட வரி வாங்கிக் கொண்டு கோவிலுக்கு செல்ல அனுமதித்ததாகவும், ஆனால் இந்து விரோத தி. மு. க அரசு கோவிலுக்கு செல்ல தடை விதிப்பதாகவும் ஆவேசமாக அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி