கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி 8-வது வாரமாக கொடிசியாவில் நடைபெற்றது. பொங்கல் மற்றும் குடியரசு தின விழா காரணமாக மூன்று வாரங்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த வாரம் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமானது. நேற்று நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீடில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. இதனால் அப்பகுதி முழுவதும் திருவிழா கோலம் பூண்டது.