கோவை: கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

69பார்த்தது
கோவை வதம்பச்சேரி பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. 

இரவில் கடும் குளிர் வாட்டி எடுத்த நிலையில், அதிகாலையில் வதம்பச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த சில நாட்களாகவே கோவையில் இதுபோன்ற பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி