கருமத்தம்பட்டி: மின்சாரம் தாக்கி மயில் பலி

62பார்த்தது
கருமத்தம்பட்டி: மின்சாரம் தாக்கி மயில் பலி
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பாலாஜி நகர் பகுதியில் நேற்று பெண் மயில் ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது. மயில் ஒன்று அப்பகுதியில் உள்ள மின் கம்பியின் அருகே பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தது. இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மயிலை மீட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி