சென்னை: ரூ. 5 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்தவர் அதிரடி கைது
திரு.வி.க. நகர் |

சென்னை: ரூ. 5 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்தவர் அதிரடி கைது

சென்னை தேனாம்பேட்டையில் தொழிலதிபர் தாராசந்த் என்பவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் 1,262 சதுர அடி நிலத்துடன் கூடிய வீடு உள்ளது. ரூ. 5 கோடி மதிப்புள்ள இடத்தை அவரது தாயாரைப் போல் போலியான நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து சொத்தை அபகரித்துள்ளனர். பின்னர் அந்த சொத்துப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ. 3,03,28,000 கடன் பெற்றுள்ளனர். பின்னர் வங்கிக்கு பணம் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மூலம் தொழிலதிபர் தாராசந்திற்கு தெரியவந்தது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியைச் சேர்ந்த தர்(60), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி(59) என்பவரின் உதவியுடன் போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதி ஆள்மாறாட்டம் செய்த கலைச்செல்வியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளி தரை போலீசார் தேடி வந்தனர். கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த தரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபோல் பலவேறு நில மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


தமிழ் நாடு