பிரதமர் மீது முதல்வர் மு. க. ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
வில்லிவாக்கம் |

பிரதமர் மீது முதல்வர் மு. க. ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மலிவான உத்தியை பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றி முகட்டை நோக்கி இண்டியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரைகளை பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும், அதைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்று தமிழக மக்களும், சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுகொண்ட தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறோம்.

வீடியோஸ்