நீலகிரி: தேனீக்கள் கொட்டியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாபிர் என்பவர், ஊசிமலை காட்சி முனை அருகே உள்ள தடைசெய்யப்பட்ட பகுதிக்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். அங்கு அவர்கள் தேனீக்களை சீண்டியுள்ளனர். இந்நிலையில், அவர்களை தேனீக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கொட்டியதில் ஜாபிர் உயிரிழந்தார். இதையடுத்து, ஜாபிரின் நண்பர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.