பெரம்பூர்
வதந்திகளை பரப்பினால் நடவடிக்கை - அமைச்சர்
பழனி பஞ்சாமிர்தம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு இன்று(செப்.22) எச்சரித்துள்ளார். கோயில்களுக்கு தேவையான நெய், ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டுமென ஆணையரால் 2021 ஆம் ஆண்டே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக கூறிய அவர், பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய பாஜகவைச் சேர்ந்த வினோஜ், செல்வக்குமார் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.