தியாகராய நகர் - Thiyagarayanagar

சென்னை: வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்

சென்னை: வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்

வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என மிரட்டும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்க்காமல் உடனே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மிரட்டியுள்ளனர்.  கடலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்ய வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பாமக முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி விரைவில் சுற்றுப்பயணம்
Nov 07, 2024, 01:11 IST/மைலாப்பூர்
மைலாப்பூர்

சென்னை: தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி விரைவில் சுற்றுப்பயணம்

Nov 07, 2024, 01:11 IST
அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று (நவம்பர் 6) நடைபெற்றது.  இதில், மாவட்டம் தோறும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அதிக அளவில் இளைஞர்களை கட்சிக்குள் சேர்ப்பது, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது, தற்போது அதிமுக மீதான மக்களின் மனநிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும். வாக்குச்சாவடி குழுக்கள் இல்லாத இடங்களில் உடனடியாக அமைக்க வேண்டும். கட்சியை தேர்தலுக்குத் தயார்படுத்த வேண்டும். திமுக ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், அதிமுக அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்த தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.