தீபாவளி கூட்டம்: சென்னை தி. நகரில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

82பார்த்தது
தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சென்னை தி. நகரில் போலீஸார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு வசதியாக பொது மக்கள் புத்தாடை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்னை தி. நகர், புரசைவாக்கம், பாரிமுனை உட்பட அனைத்து வணிக வீதிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால், அந்தப் பகுதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக சென்னை போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, மாம்பலம் காவல் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சென்னை காவல் ஆணையர் அருண் இன்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை ஆகிய 3 இடங்களில் சிறப்பு கட்டுபாட்டு அறைகளை அமைத்துள்ளோம். கடந்த வாரம் மழை மீட்பு பணிக்காக சென்னையில் 35 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைத்திருந்தோம். அது சிறப்பாக செயல்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதேபோன்று தற்போது கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளோம் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி