செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 471 நாள் கழித்து செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வழக்கு நிறைவு பெற்றால் மீண்டும் ஜெயிலுக்கு தான் போக வேண்டும்
குளித்தலை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலின் என்ன சொன்னார். செந்தில் பாலாஜி குடும்பமே ஊழல் குடும்பம் என்று கூறினார். இதை அவருக்கு நான் போட்டுக் காட்ட வேண்டும்
வடிவேலு மாதிரி பேசக்கூடாது. அது வேற வாய். இது வேற வாய் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவர் சொன்னது மட்டும் உண்மை. அன்று துரோகி இன்று தியாகியா? என கேள்வி எழுப்பினார்.