தியாகராய நகர் - Thiyagarayanagar

சென்னை: வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்

சென்னை: வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்

வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என மிரட்டும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்க்காமல் உடனே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மிரட்டியுள்ளனர்.  கடலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்ய வேண்டும். அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பாமக முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: நான் முதல்வன் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமித ட்வீட்
Nov 06, 2024, 15:11 IST/அண்ணா நகர்
அண்ணா நகர்

சென்னை: நான் முதல்வன் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமித ட்வீட்

Nov 06, 2024, 15:11 IST
உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நான் முதல்வன் திட்டம் வாயிலாக நாம் வளர்த்தெடுத்து வருகிறோம் என நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐபிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த தேவ்காந்த் அகர்வால் தனது பதிவில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், நாளைய திறன் திட்டம் குறித்தும், அதில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்தும் விளக்கியுள்ளார்.  இந்நிலையில், இந்த இரு பதிவுகளையும் சுட்டிக்காட்டி 'நான் முதல்வன்' திட்டத்தின் வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழகத்தின் முதல்வராகவும் ஒரு பெருமைமிகு பெற்றோராகவும் நமது இளைஞர்களின் அறிவுத்திறன் அங்கீகாரம் பெறுவது கண்டு எனது நெஞ்சம் பெருமித உணர்வால் நிறைகிறது. என் நெஞ்சுக்கு நெருக்கமான 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நாம் வளர்த்தெடுத்து வருகிறோம். நமது இளைஞர்கள் நிமிர்ந்து நின்று, உலகை வெற்றிகொள்ளவும் முன்னடத்திச் செல்லவும் தயார் என்று பறைசாற்றுகிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.