ரஜினிகாந்தின் உடல்நிலை: அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம்

75பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த் வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் சர்வதேச முதியோர் தினவிழா மற்றும் தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 975 இடங்கள் கொண்ட முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, ரஜினிகாந்த் பீரியாடிக் செக்கப்பிற்காக மருத்துவமனை சென்றுள்ளார். வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று முறை அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையிடம் பேசி விசாரித்துள்ளோம், விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி