விசிக தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி அல்ல: ஹெச். ராஜா

76பார்த்தது
திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரியஅரசியல் சக்தி இல்லை என பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்துடன் மக்கள்நல கூட்டணி வைத்து தேர்தலைசந்தித்தன. ஆனால், அந்த கூட்டணிக்கு வெறும் 6 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன. அதனால், திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை.

மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஸ்அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என அவர் கேள்வி எழுப்பினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி