ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி வரும். 2026ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக இருக்கும். 2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், திராவிட சித்தாந்தங்கள் காலாவதியாகி வருவதை ஒவ்வொரு தேர்தலும் நமக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. போன தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது. இனியும் மக்கள் திராவிட கொள்கையை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதே இந்த சரிவுக்கு காரணம். 2026ஆம் ஆண்டு கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி 12 சதவீதத்துக்கும் கீழே போய்விடும். அது நடந்தே தீரும். அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி வரும். 2026ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக இருக்கும். 2031 திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என அண்ணாமலை தெரிவித்தார்.