விஜய் திமுகவில் சேர்ந்திருக்கலாம்:  ஹெச். ராஜா

59பார்த்தது
தவெக தீர்மானங்களை பார்க்கும்போது விஜய் திமுகவில் சேர்ந்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர்  ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, நவ. 7-ல் தஞ்சை செல்லும் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்க கோயில் பணத்தை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் வருகையை விளம்பரப்படுத்த கோயில் நிர்வாகத்திற்கு திமுக நெருக்கடி அளிப்பதாகவும்,  உதயநிதி வருகைக்காக கோயில் நிதியில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார்.

தவெக தீர்மானங்களை பார்க்கும்போது விஜய் திமுக-வில் சேர்ந்திருக்கலாம் என தோன்றுவதாகவும் அவர்  தெரிவித்தார்.

ஒருவரின் கொள்கையை அடுத்தவரின் விருப்பத்திற்கு எதிராக திணிப்பதே பாசிசம்  என்றும், தி. க. , கம்யூனிஸ்ட் தான் பாசிசம்; ஆனால் மத்திய அரசை பாசிசம் என விமர்சனம் செய்வதாக ஹெச். ராஜா கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி