ஒரு நம்பிக்கையை யாரும் அவமரியாதை செய்யக்கூடாது - தமிழிசை

80பார்த்தது
லட்டு விவகாரத்தில் ஓரு சமூகத்தின்நம்பிக்கையை அவமரியாதை செய்யக்கூடாது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் சரி, ஆந்திராவை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் சரி உணர்வுப்பூர்வமாக ஒரு தவறு நடந்ததுஎன்றால், அந்த தவறை சுட்டி காண்பிக்க கடுமையான முயற்சி மேற்கொள்கின்றனர்.

ஒரு நம்பிக்கையை யாரும் அவமரியாதை செய்யக்கூடாது. இதை பெரிதாக்குவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் போன்றோர் சொல்கின்றனர். ஆனால் இது மாநில பிரச்சினை கிடையாது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கின்றனர். எனவே உலகம் முழுவதும் அந்த நம்பிக்கையை உடையவர்களின் பிரச்சினை இது.

ஆந்திராவில் தங்களுக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனர். வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி