அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் மதிக்க வேண்டும் - தமிழிசை

61பார்த்தது
அரசியல் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (அக்.,4) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'மற்ற கட்சிகளை போல நம் கட்சி சாதாரண கட்சி அல்ல' என குறிப்பிட்டிருக்கிறார். ஆண்ட கட்சி, ஆண்டு கொண்டிருக்கும் கட்சி, பல மாநிலங்களை ஆளும் கட்சிகள், பல ஆண்டுகளாக பல கொள்கைகளை கொண்ட கட்சிகள் நாட்டில் இருக்கிறது. அவரது இந்த வார்த்தை தமிழக அரசியலில் ஏற்றுக்கொள்ளப்படாது.

விஜய் அவரது கட்சியை உயர்வாக சொல்லலாம். ஆனால், மற்ற கட்சிகளை சாதாரண கட்சிகள் எனச் சொல்லுவதற்கு விஜய் எந்த அளவுக்கு உயர்ந்து விட்டார் என்பது எனக்கு தெரியவில்லை. விஜய் மற்ற அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், தொண்டர்களையும் மதிக்க வேண்டும்.

சினிமாவுக்கு வருவது போல, விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கூடி விடும். அதில் சந்தேகம் இல்லை. மாநாட்டை விஜய் நடத்திக் காண்பித்துவிடுவார். ஆனால், கட்சியை எப்படி நடத்திக் காண்பிப்பார் என்பதைத் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். திரைத்துறையினர் அடித்தட்டு மக்களை தான் குறி வைக்கிறார்கள். அவர்களை வேலைக்குச் செல்ல வேண்டாம், மாநாட்டிற்கு வாருங்கள் என சொல்வது நியாயம் அல்ல என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி