தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். மத்திய அமலாக்கத் துறை தமிழக காவல்துறைக்கு அளித்த ₹4730 கோடி மணல் கொள்ளையின் ஊழல் புகார் குறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக இன்று (அக்.,13) வெளியிட்ட அறிக்கையில், விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மணல் வளத்தையும் நிலத்தடி நீரையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மதுரை, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மணல் கொள்ளை நடப்பதை வெட்ட வெளிச்சமாக நேற்று வரை ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தமிழக அரசு மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க, மத்திய அமலாக்கத்துறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு சட்டங்களின் கீழ் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மற்றும் மணல் கொள்ளைக்கு உடனடியாக இருந்த இருக்கின்ற அதிகாரிகள் தானாக முன்வந்து உடனடியாக உரிய விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.