2 நாட்களுக்கு சென்னையில் அதி கனமழை தொடரும்: பாலச்சந்திரன்

72பார்த்தது
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது.

மழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும். விழுப்புரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்னாமலை, புதுச்சேரி, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பத்தூர், தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி