சேலம் நகரம் - Salem City

தளவாய்பட்டியில் இசைக் கருவிகள், புகைப்பட கண்காட்சி

சேலம் தளவாய்பட்டியில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இசைக் கருவிகள் மற்றும் புகைப்பட கண்காட்சி நேற்று(செப்.19) நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த தவில், நாதஸ்வரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளை பார்வையிட்டு அதன் சிறப்புகளை கேட்டறிந்தார். கண்காட்சி நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பொதுமக்கள் வந்து பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: - இசைக்கருவிகள் சிறப்பு வாய்ந்த இசைக் கலைஞர்களின் புகைப்படங்களும், கண்காட்சியின் முக்கிய அம்சமாக இசை இலக்கண, செயல்முறை சார்ந்த அம்சங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குரலிசை, பரதம், நாதசுரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்களின் சிறப்புகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் வகையில் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. அடுத்த தலைமுறை செவ்வியல் இசை, பரதநாட்டியம் மற்றும் தொன்மை மிகுந்த நாட்டுப்புறக்கலை, இந்துஸ்தானி இசை ஆகியவற்றின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக பாரம்பரிய இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. என்று கூறினார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా