தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கூறப்பட்டுள்ளது.