ஆடுகளில் பிராய்லர் என்ற வகையே கிடையாது என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், 'போயர் வகை ஆடுகள் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. இந்த ஆடுகள் 6 மாதத்தில் 24 கிலோ எடை வரை வளரும். கலப்பின விருத்தியில் தமிழ்நாட்டில் இந்த ஆடுகள் குறைவான அளவிலேயே உற்பத்தியாகின்றன. இந்த ஆடுகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு என எந்த அறிவியல்பூர்வ சான்றுகளும் இல்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.