சேலம் நகரம் - Salem City

சேலம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

சேலம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

சேலம் வீராணம் அருகே மன்னார்பாளையம் பிரிவு ரோட்டை சேர்ந்தவர் சரவணன். அவருடைய மனைவி சகுந்தலா (வயது 35). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலுக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று மதியம் சகுந்தலா வீட்டின் அருகே உள்ள விவசாயி ஒருவருடைய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சகுந்தலாவின் உடலை மீட்டனர். சகுந்தலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా