காவலர் வீரவணக்க நாளையொட்டி, சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு ஆணையர் பிரவீன்குமார் அபிநபு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியா - சீனா போரின் போது, அக்டோபர் 21 ஆம் தேதி சீனா நடத்திய தாக்குதலில் 10 ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தனர். உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி, நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சேலம் சரக டிஐஜி உமா, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.