லால்குடி - Lalgudi

வண்டல் மண் கடத்திய 1ஜே. சி. பி, 2டிராக்டர்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதுவத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் வண்டல் மண் திருட்டு நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது 1 ஜே. சி. பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளி கடத்தியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 1 ஜே. சி. பி. மற்றும் 2 டிராக்டர்களையும் அதில் அள்ளப்பட்ட வண்டல் மண்ணையும் பறிமுதல் செய்தனர். வண்டல் மண் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் முதுவத்தூர் பகுதியை சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் செல்வகுமார் என்பவரின் வயலில் தென்னம்பிள்ளை மரம் வளர்ப்பதற்கு பெரிய ஏரியில் இருந்து அனுமதி இன்றி திருட்டுத்தனமாக வண்டல் மண் எடுத்தது தெரியவந்தது. இதை அடுத்து செல்வகுமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ராஜ், சுரேஷ், பச்சமுத்து மகன் செல்வகுமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் கல்லக்குடி காவல் நிலையத்தில் நான்கு பேரையும் மற்றும் பறிமுதல் செய்த 1 ஜேசிபி 2 டிராக்டரை ஒப்படைத்தனர். இதை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கல்லக்குடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా
అవినీతి రహిత భారతదేశ నిర్మాణం బీజేపీ పార్టీ గెలుపుతోనే సాధ్యం : బీజేపీ ఎంపీ అభ్యర్థి సైది రెడ్డి
May 09, 2024, 02:05 IST/

అవినీతి రహిత భారతదేశ నిర్మాణం బీజేపీ పార్టీ గెలుపుతోనే సాధ్యం : బీజేపీ ఎంపీ అభ్యర్థి సైది రెడ్డి

May 09, 2024, 02:05 IST
అవినీతి రహిత భారతదేశాన్ని చూడాలన్న, ప్రపంచంలో భారత్ ను ఆన్ని రంగాలలో అభివృద్ధి చేయాలన్న మోదీ నాయకత్వంలోనే సాధ్యమని నల్గొండ బీజేపీ పార్టీ ఎంపీ అభ్యర్థి శానంపూడి సైదిరెడ్డి అన్నారు. మెళ్లచెర్వు , చింతలపాలెం మండల కేంద్రం మరియు దొండపాడు గ్రామంలో ఎన్నికల ప్రచారంలో సైదిరెడ్డి పాల్గొన్నారు.ఈ సందర్భంగా ఆయన మాట్లాడుతూ 400 సీట్లలో గెలుపొంది మూడవ సారి కేంద్రంలో బీజేపీ ప్రభుత్వం ఏర్పాటు కాబోతున్నదన్నారు. కులం,మతం చిన్న,పెద్దా తేడా లేకుండా ప్రతిఒక్కరూ మోదీ ప్రధాని కావాలని కోరుకుంటున్నారని అన్నారు.కాంగ్రెస్ పార్టీకి దిశా నిర్దేశం చేసే నాయకత్వం లేదని రాష్ట్రంలో ఏదో గాలి వాటంగా , దొంగ హామీ లతో ప్రజలను మభ్యపెట్టి ప్రభుత్వం ఏర్పాటు చేశారని ఎద్దేవా చేశారు.బడుగు,బలహీన వర్గాల మరియు యువత అభివృద్దే ధ్యేయంగా పని చేస్తానని తెలిపారు.నల్లగొండ లో కాషాయ జెండా ఎగురవేయడం ఖాయమని బీజేపీ గెలుపొందే 400 సీట్లలో నల్లగొండ స్థానం ఒకటని ధీమా వ్యక్తం చేశారు.