திருப்பைஞ்சீலியில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட தேரோட்டம் - பதட்டம்

1530பார்த்தது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் துவங்கி நடைபெற்றது. நமச்சிவாயா என்கிற நாமம் முழங்க பக்தர்கள் திருத் தேரை உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

தெற்கு ரத வீதியில் தேர் வந்து கொண்டிருந்தபோது சோலார் லைட்டில் எதிர்பாராத விதமாக தேர் சிக்கியது - சுமார் அரை மணி நேரம் தேரை திசை மாற்றுவதற்கு போராடி வந்த நிலையில் இளைஞர் ஒருவர் தேர் சக்கரத்தில் ஏறி கம்பத்தை வளைத்து பிடித்து நகர்த்தினார். இதனை தொடர்ந்து தேர் நகர்ந்தது. ஆனால் சற்று நகர்ந்த நிலையில் தேர் நகர்த்தும் அரைகட்டை என்பது பழுதாகி உடைந்தது. இதனால் தேரை நகர்த்த இயலவில்லை. அரை கட்டையானது உடனடியாக செய்ய இயலாத காரணத்தால் தேரானது அப்படியே சாலையில் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரைக்கட்டையை மின்னல் வேகத்தில் செய்திட கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் தேரானது இழுக்கப்பட்டது. தேர் பாதியில் நின்றதால் பக்தர்கள் மிகுந்த பதட்டம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி