அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி

2286பார்த்தது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரைக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு திருமண நிகழ்வில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராமத்தில் சேர்ந்த மணிவண்ணன் என்பவரை சந்தித்துள்ளார். அப்போது் மணிவண்ணன் சென்னை கிண்டி அருகே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருவதாகவும் தான் நினைத்தால் அதிக பேருக்கு வேலை அரசு வேலை வாங்கித் தர முடியும் என கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் சண்முகம் மகன் மற்றும் மகள் உள்ளிட்ட 12 நபர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 15 லட்சம் பணம் பெற்று வேலையும் வாங்கித் தராமல் பணமும் திருப்பி தராததால் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சண்முகம் வழக்கு தொடுத்ததின் பேரில் நீதிமன்ற உத்தரவின் படி சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் மணிவண்ணன் மீது மோசடி வழக்கினை மண்ணச்சநல்லூர் போலீஸார் பதிந்து மணிவண்ணனை தேடி வருகின்றனர். கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேற்று 30. 04. 2024 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி