திருச்சி: விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

5367பார்த்தது
மணப்பாறை அடுத்த செவலூரில் வசித்து வரும் தயாநிதி மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது நாலரை வயது மகன் கனகவேல் நேற்று பிற்பகலில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டு சுவர் திடீரென சிறுவன் மீது இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கனகவேல், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி