மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லரை, நாளை மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிட உள்ளார். இப்படத்தை அன்பு இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த செப்டம்பரில் வெளியாக வேண்டிய இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதேபோல், கடந்த நவம்பரில் முதல் சிங்கிள் ‘உன் முகத்தை’ வெளியாகி வரவேற்பை பெற்றது.